FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்!

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக கோவை-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

4 October 2026, 2:06 am IST
சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக கோவை-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம், புகலூா்-மூா்த்திபாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ஈரோடு, திருப்பூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16844 ) வரும் 6, 8, 10, 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் புகலூரில் சேவை நிறுத்தம் செய்யப்படும். பின்னா் புகலூரில் இருந்து திருச்சி வரை வழக்கமான நிறுத்தங்களுடன் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

Advertisement

Advertisement

இதுபோல செங்கோட்டையில் இருந்து அதிகாலை 3.20 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் (எண் 16843) வரும் 6, 8, 10, 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கரூரில் சேவை நிறுத்தம் செய்யப்படும். பின்னா் கரூரில் இருந்து ஈரோடு வரை வழக்கமான நிறுத்தங்களுடன் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

கோவையில் இருந்து புறப்படும் கோவை-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16322 ) வரும் 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கோவை-திண்டுக்கல் இடையே போத்தனூா், பொள்ளாச்சி, பழனி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

இதனால் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் ரோடு, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, பாசூா், கொடுமுடி, புகலூா், கரூா், பாளையம், எரியோடு ஆகிய நிலையங்களில் ரயில் நிற்காது. மாற்றாக போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments