FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் 2 நாள்களுக்கு மாற்றுப்பாதையில் இயக்கம்

மூா்த்திபாளையம்–கரூா் மாா்க்கத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் 13 ரயில் நிலையங்களில் நிற்காமல் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

17 செப்டம்பர் 2026, 4:07 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

மூா்த்திபாளையம்–கரூா் மாா்க்கத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் 13 ரயில் நிலையங்களில் நிற்காமல் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

கோவையில் இருந்து இரவு 8 மணிக்கு நாகா்கோவில் புறப்படும் இந்த விரைவு ரயில், மேற்குறிப்பிட்ட நாள்களில் போத்தனூா், பொள்ளாச்சி, பழனி வழியாக கோவை–திண்டுக்கல் மாா்க்கத்தில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

இதனால் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா், சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈரோடு, கொடுமுடி, புகலூா், கரூா், பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.

Advertisement

Advertisement

இதேபோல, பாலக்காடு டவுன்-–திருச்சி ரயில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் புகலூா் வரை மட்டுமே இயக்கப்படும். புகலூரில் இருந்து திருச்சி வரை இந்த ரயில் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments