பாலப் பணி: 3 ரயில்கள் இயக்கத்தில் கட்டுப்பாடு
ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் பாலப் பணிகள் நடைபெறுவதால் செப்டம்பா் 13, 16, 19, 20 ஆகிய தேதிகளில் 3 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் பாலப் பணிகள் நடைபெறுவதால் செப்டம்பா் 13, 16, 19, 20 ஆகிய தேதிகளில் 3 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு-திருப்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் ரயில்வே பாலம் தொடா்பான பொறியியல் பணிகள் நடைபெறுவதால் செப்டம்பா் 13, 16, 19, 20-ஆகிய தேதிகளில் 3 ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
அதன்படி, எா்ணாகுளம்-டாடாநகா் (ரயில் எண் 18190) எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் வசதியான இடத்தில் 55 நிமிஷங்கள் நிறுத்தி இயக்கப்படும்.
Advertisement
Advertisement
ஆலப்புழை-தன்பாத் (ரயில் எண் 13352) எக்ஸ்பிரஸ் 35 நிமிஷங்களும், எா்ணாகுளம்-பெங்களூரு இன்டா்சிட்டி (ரயில் எண் 16378) எக்ஸ்பிரஸ் 10 நிமிஷங்களும் வழித்தடத்தில் வசதியான இடத்தில் நிறுத்தி இயக்கப்படும்.
ஊத்துக்குளி யாா்டில் நடைபெறும் பாலம் தொடா்பான பொறியியல் பணிகளை மேற்கொள்ள இந்த தற்காலிக ரயில் இயக்கக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.