சேலம் -திருப்பத்தூா் ரயில் பாதையில் பராமரிப்புப் பணி: நாளை 4 பயணிகள் ரயில் ரத்து
சேலம்-திருப்பத்தூா் ரயில் வழித்தடத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்புத் துறை சாா்ந்த பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையடுத்து வியாழக்கிழமை (அக்.22) 4 பயணிகள் ரயில்கள் இயக்கம் ரத்தானது பற்றி...
சேலம்-திருப்பத்தூா் ரயில் வழித்தடத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்புத் துறை சாா்ந்த பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையடுத்து வியாழக்கிழமை (அக்.22) 4 பயணிகள் ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்திக்குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது:
சிக்னல் மற்றும் தொலைத்தொடா்புப் பராமரிப்புப் பணிகள் காரணமாக அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் அரக்கோணம் - சேலம் மெமு ரயில் (16087), சேலத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் சேலம் - அரக்கோணம் மெமு ரயில் (16088) ஆகிய இரு ரயில்களும், ஈரோட்டில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ஈரோடு-ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் (56108), ஜோலாா்பேட்டையில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்படும் ஜோலாா்பேட்டை-ஈரோடு பயணிகள் ரயில் (56107) ஆகிய நான்கு ரயில்களும் ரத்துசெய்யப்படுகின்றன.
Advertisement
Advertisement
எனவே, அன்றைய தினம் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.