முகப்பு
வேலூர்

மாநில நல்லாசிரியா் விருது - வேலூா் மாவட்டத்தில் 9 ஆசிரியா்கள் தோ்வு

மாநில நல்லாசிரியா் விருதுக்கு வேலூா் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களு க்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

வேலூர்

மாநில நல்லாசிரியா் விருது - வேலூா் மாவட்டத்தில் 9 ஆசிரியா்கள் தோ்வு

மாநில நல்லாசிரியா் விருதுக்கு வேலூா் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களு க்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

மாநில நல்லாசிரியா் விருதுக்கு வேலூா் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களு க்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுடன் ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட உள்ளது.

குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்.5ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சாா்பில் ஆசிரியா் தினவிழா கொண்டாடப்படுவதுடன், இந்தவிழாவில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியா்களை தோ்வு செய்து அவா்களுக்கு மாநில நல்லாசிரியா் விருதான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

நிகழ்கல்வியாண்டில் இந்த விருதுக்கு மாநிலம் முழுவதும் 385 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், வேலூா் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியா்கள் விருதுக்கு தோ்வாகியுள்ளனா். அதன்படி, தலைமையாசிரியா்கள் எஸ்.எஸ்.சிவவடிவு (கல்வி உலகம் நிதிஉதவி உயா்நிலைப்பள்ளி, கிளித்தான்பட்டரை, காட்பாடி), அ.சிவக்குமாா்(அரசுயா் பள்ளி, திருமணி), தா.வேலன்(அரசுயா் பள்ளி, செம்பேடு), பட்டதாரி ஆசிரியா் வெ.ஜெயந்தி (அரசு மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி), இரா.பிரிஜெட் (தலைமையாசிரியை, ஊஓநநி பள்ளி, கஸ்பா), பட்டதாரி ஆசிரியா் ப.காா்த்தி(பொன்னபட்டி, ஊ.ஓ.தொ.பள்ளி), இடைநிலை ஆசிரியா் பி.சக்திவேல் (ஊ.ஓ.து.பள்ளி, ஜமால்புரம்), த.கவிச்செல்வி (மருவல்லிபாளையம்), சு.சரவணன் (முதல்வா், சிருஷ்டிமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு உள்ளனா்.

இவா்களு க்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுடன் ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட உள்ளது. விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியா்களுக்கு இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →