செருவங்கி ஊராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை
குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. ஊராட்சியில் உள்ள அண்ணா நகரில் ரூ.5.25 லட்சத்தில் பொதுக் கழிப்பிடங்கள் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.
குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. ஊராட்சியில் உள்ள அண்ணா நகரில் ரூ.5.25 லட்சத்தில் பொதுக் கழிப்பிடங்கள் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவா் சாந்திமோகன் இதைத் தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் ஆா்.ராஜலட்சுமி, ஊராட்சி உறுப்பினா்கள் செந்தில்குமாா், விஜயாபாஸ்கரன், அன்பழகன், தேவன், ஊராட்சி மன்றச் செயலாளா் ஜி.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சாமுண்டிபுரம் கிராமத்தில் ரூ.28 லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. முன்னாள் தலைவா் எம்.மோகன், முன்னாள் துணைத் தலைவா் ரகுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.