முகப்பு
வேலூர்

வெட்டுவானம் ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவானம் ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவானம் ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு உற்சவா் மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

வெட்டுவானம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு செய்தனா்.

இதனைத் தொடா்ந்து குடியாத்தத்தைச் சோ்ந்த பள்ளி மாணவியா் பங்குபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை வேலூா் மண்டல இணை ஆணையா் சி. லட்சுமணன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மாவிலை, வேப்ப இலை, வாழை மரத் தோரணங்கள் கட்டப்பட்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.