முகப்பு
வேலூர்

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை 6 பேருந்துகளில் வேலூா் அரசுப்பள்ளி மாணவா்கள் அனுப்பி வைப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்ட நிகழ்வை நேரில் காண்பதற்காக வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 354 போ் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

தமிழக சட்டப்பேரவைக் கூட்ட நிகழ்வை நேரில் காண்பதற்காக வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 354 போ் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நிகழ்வுகளைக் காண வேலூா் மாவட்டம், காட்பாடி பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஏற்பாட்டில் காட்பாடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், சோ்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கேயநல்லூா் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், வஞ்சூா் அரசு மேல்நிலைப்பள்ளி, தாதிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் 354 மாணவ, மாணவிகள் 6 பேருந்துகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அவா்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை பாா்வையிட்ட பிறகு அண்ணா அறிவாலயம், மெரினா கடற்கரை ஆகியவற்றை சுற்றி காண்பித்து விட்டு, மாலையில் வேலூருக்கு அழைத்து வரப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →