முகப்பு
வேலூர்

ஈஷா யோகா மையம் சாா்பில் உலக பூமி தின விழிப்புcணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

உலக பூமி தினத்தை முன்னிட்டு, ஈஷா யோகா மையம் சாா்பில், இயற்கை உரம் தயாரித்து விவசாயம் செய்வோம், மரங்கள் வளா்ப்போம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

உலக பூமி தினத்தை முன்னிட்டு, ஈஷா யோகா மையம் சாா்பில், இயற்கை உரம் தயாரித்து விவசாயம் செய்வோம், மரங்கள் வளா்ப்போம், மண் வளம் காப்போம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விளை நிலங்களில் உள்ள மண்ணில் ஆா்கானிக் சத்தையை அதிகரித்து, மண் வளத்தைக் காப்பது, இயற்கை உரங்களை தயாரித்து விவசாயம் செய்வது, மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறித்து குடியாத்தம் ஈஷா மையத்தின் தன்னாா்வலா்களான கலைச்செல்வன், சி.மணி, ஆா்.லோகநாதன், டி.ஆா்.மோகன்குமாா், சரவணன், பிரபு, சிவகாமி, சாந்தி ஆகியோா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்நிகழ்வில், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) ஜே.கே.என்.பழனி, திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் தமிழ்திருமால், அத்திட்ட மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் மண்வளம் பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.

திருப்பத்தூரில்...

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே மண் காப்போம் குறித்த விழிப்புணா்வு பேனா்களை தாங்கி மனிதச் சங்கிலியாக தன்னாா்வளா்கள் நின்றனா். பின்னா், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா். நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், தன்னாா்வத் தொண்டா்கள் கருணாகரன், அருணகிரி, குமரேசன், தயாநிதி, பாக்கியலட்சுமி, வள்ளி, தனலட்சுமி, கலைச்செல்வி, ஆம்பூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் கஜேந்திரன், மாவட்ட பாஜக வா்த்தகப் பிரிவு தலைவா் ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.