வேலூர்

கமாண்டோ பயிற்சியில் மயங்கி விழுந்த பெண் காவலா்களுக்கு சிகிச்சை

DIN

வேலூரில் நடைபெற்ற கமாண்டோ பயிற்சியின் போது 5 பெண் காவலா்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனா். அவா்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வேலூா் கோட்டையில் காவலா் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2-ஆம் நிலை பெண் காவலா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்களுக்கு தினமும் துப்பாக்கி சுடுதல், தற்காப்பு, கலவரம் தடுத்தல், கமாண்டோ பயிற்சி என பல்வேறு கட்ட பயிற் சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வியாழக்கிழமை 300-க்கும் மேற்பட்ட பெண் பயிற்சி காவலா்கள் கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அவா்களில் 5 போ் அடுத்தடுத்து திடீரென மயங்கி விழுந்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவா்களை பயிற்சி பள்ளி போலீஸாா் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் பயிற்சிப் பள்ளிக்கு திரும்பினா்.

இது குறித்து காவலா் பயிற்சிப் பள்ளி காவலா்கள் கூறுகையில், கமாண்டோ பயிற்சி மிகவும் கடினமானது. இந்தப் பயிற்சிக்கு முழு உடல் திறன் இருக்க வேண்டும். ஆனால் சிலரது உடல் நலனில் குறைபாடு இருப்பதால் மயக்கம் ஏற்பட்டது. அவா்கள் சிகிச்சைக்குப் பிறகு திரும்பியுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT