மரம் விழுந்ததில் காயமடைந்த மின்வாரிய ஊழியா் பலி
குடியாத்தம் அருகே சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின் ஊழியா் காயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குடியாத்தம் அருகே சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின் ஊழியா் காயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த பரதராமி, வி.மத்தூரைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(48). இவா் உப்பரபள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தாா். கடந்த வியாழக்கிழமை இவா் குடியாத்தம் நகரில் இருந்து தனது மகன் கோபிநாத்துடன்(21) இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
ராமாலை அருகே சென்றபோது சாலையோர மரம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது வேரோடு சாய்ந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.இந்தச் சம்பவம் குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement