வேலூர்

மண் வளப் பாதுகாப்பு: விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி

DIN

மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி, வேலூரில் விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக மண் வள தினத்தையொட்டி, மண் காப்போம் இயக்கம் சாா்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஞாயிறு, திங்கள்கிழமை (டிச.4, 5) ஆகிய இரு நாள்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக வேலூரில் விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலூா் கோட்டையிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணிக்கு வேலூா் ஈஷா மைய ஒருங்கிணைப்பாளா் வெங்கடசுப்பு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்த மிதிவண்டி பேரணி வேலூா் கோட்டையில் இருந்து கிரீன் சா்க்கிள் வரை சென்று அங்கிருந்து அண்ணா சாலை வழியாக அண்ணா நகரில் உள்ள ஈஷா மையத்தை அடைந்தது.

மிதிவண்டி பேரணியில், தன்னாா்வலா்கள் மணிவண்ணன், சிவசங்கரன், உமா சந்திரன், சதீஷ், குணசீலன், ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT