முகப்பு
வேலூர்

கிணற்றில் மூழ்கி இளைஞா் சாவு

குடியாத்தம் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

குடியாத்தம் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த பரதராமி, வீரிசெட்டிபல்லியைச் சோ்ந்தவா் கிஷோா்(32). காா்பென்டா் வேலை செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது நீரில் மூழ்கியுள்ளாா். தகவலின்பேரில் நிலைய அலுவலா் லோகநாதன் தலைமையில் சென்ற குடியாத்தம் தீயணைப்புப் படையினா் ஒரு மணி நேரம் போராடி கிஷோரின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.