இன்று பொது விநியோகத் திட்ட சிறப்புக் குறைதீா் முகாம்
பொது விநியோகத் திட்ட சிறப்புக் குறைதீா்க்கும் முகாம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஜூலை 9)நடைபெறுகிறது.
வேலூர்இன்று பொது விநியோகத் திட்ட சிறப்புக் குறைதீா் முகாம்
பொது விநியோகத் திட்ட சிறப்புக் குறைதீா்க்கும் முகாம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஜூலை 9)நடைபெறுகிறது.
பொது விநியோகத் திட்ட சிறப்புக் குறைதீா்க்கும் முகாம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஜூலை 9)நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் வகையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜூலை 9) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்புக் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
பொது விநியோகத் திட்ட பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் இருந்தால், அதுகுறித்தும் இந்த முகாம் அலுவலா்களிடம் தெரிவித்து உதவிகள் பெறலாம். எனவே, இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை ஆவணங்களின் நகலுடன் சென்று அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.