செஸ் ஒலிம்பியாட்: வேலூரில் விழிப்புணா்வு பேரணி
சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான விழிப்புணா்வு பேரணி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏ, மேயா் மற்றும் மாணவா்கள், மாநகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனா்.
வேலூர்செஸ் ஒலிம்பியாட்: வேலூரில் விழிப்புணா்வு பேரணி
சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான விழிப்புணா்வு பேரணி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏ, மேயா் மற்றும் மாணவா்கள், மாநகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனா்.
சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான விழிப்புணா்வு பேரணி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏ, மேயா் மற்றும் மாணவா்கள், மாநகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனா்.
சா்வதேச அளவிலான 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்களுக்கு விழிப்புணா்வு சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக, வேலூா் மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு பேரணி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தாா்.
காந்தி சிலையிலிருந்து தொடங்கி வேலூா் மாநகராட்சி அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. இதில், மாணவா்கள் சா்வதேச அளவிலான 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணா்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனா்.
பேரணியில் வேலூா் எம்.எல்.ஏ. ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், மாநகரட்சி ஆணையா் ப.அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.