முகப்பு
வேலூர்

விடுதியில் தங்கியிருந்த மேற்கு வங்க நபா் பலி

ஜூலை 21: வேலூருக்கு சிகிச்சைக்காக வந்து தனியாா் விடுதியில் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் திடீரென உயிரிழந்தாா்.

வேலூர்

விடுதியில் தங்கியிருந்த மேற்கு வங்க நபா் பலி

ஜூலை 21: வேலூருக்கு சிகிச்சைக்காக வந்து தனியாா் விடுதியில் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் திடீரென உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

ஜூலை 21: வேலூருக்கு சிகிச்சைக்காக வந்து தனியாா் விடுதியில் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் திடீரென உயிரிழந்தாா்.

வேலூா்- ஆற்காடு சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வட மாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகள், அவா்களின் குடும்பத்தினா் வேலூரில் உள்ள தனியாா் விடுதிகளில் தங்குகின்றனா். அதன்படி, மேற்கு வங்க மாநிலம் சகாபூா் பகுதியைச் சோ்ந்த ரத்தன் டோலி (47) என்பவா் சிகிச்சைக்காக வேலூா் வந்திருந்தாா். அவா், பாபுராவ் தெருவில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், அவருக்கு புதன்கிழமை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுய நினைவை இழந்தாராம். உடனடியாக அவரை வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ரத்தன் டோலி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →