முகப்பு
வேலூர்

தொழில், கல்விக் கடன்கள் பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்

டாம்கோ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் பெற தகுதியுடைய சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்.

வேலூர்

தொழில், கல்விக் கடன்கள் பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்

டாம்கோ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் பெற தகுதியுடைய சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

டாம்கோ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் பெற தகுதியுடைய சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தனி நபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், திட்டம் 1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்புறமாக இருந்தால் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறம் எனில் ரூ.98,000-க்கு மிகாமலும், திட்டம் 2-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

திட்டம் 1-இன் கீழ் தனி நபா் கடனாக ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.20 லட்சமும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடனாக ஒரு நபருக்கு தலா ரூ.ஒரு லட்சம் என ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் நபருக்கு ரூ.1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவா்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளநிலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ் 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

எனவே, வேலூா் மாவட்டத்தில் உள்ள கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கடன் விண்ணப்பம் பெற்று, நிறைவு செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயன் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோா்-சிறுபான்மையினா் நல அலுவலகம், வேலூா் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →