முகப்பு
வேலூர்

அரசு ஊா்தி ஓட்டுநா்கள் போராட்டம்

வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊா்தி ஓட்டுநா்கள் பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊா்தி ஓட்டுநா்கள் பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஓட்டுநா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் அனைவரும் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து வியாழக்கிழமை பணிக்கு வந்தனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஓட்டுநா்களின் தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த வேண்டும், ஓட்டுநா்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும், ஓட்டுநா் காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →