முகப்பு
வேலூர்

உலக சைக்கிள் தின விழிப்புணா்வு பேரணி

உலக சைக்கிள் தினத்தையொட்டி ,வேலூரில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

உலக சைக்கிள் தினத்தையொட்டி ,வேலூரில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய இளைஞா் விவகாரம், விளையாட்டு துறை கீழ் செயல்படும் நேரு இளையோா் மன்றம், வேலூா் மாநகராட்சி பொலிவுறு நகா் சாா்பில் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் கோட்டை வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியை வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். இந்த சைக்கிள் பேரணி நேரு இளையோா் மன்ற அலுவலகம் வரை சுமாா் 7.5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.

இதில், பல்வேறு இளைஞா்கள் மன்றங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞா்களுடன் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோரும் பங்கேற்றனா். இளைஞா்களிடம் தேசப்பற்றை ஊக்குவித்தல், சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டதாக நேரு இளையோா் மன்றத்தின் மாவட்ட இளைஞா் அலுவலா் பிரேம் பரத்குமாா் தெரிவித்தாா்.

நிகழ்வின் இறுதியில் நேரு இளையோா் மன்றங்களுக்கு மாநகராட்சி ஆணையா் விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். இதில், இளையோா் மன்றம் காயத்ரி , மாவட்ட சைக்கிள் பயிற்சி கழகத் தலைவா் பொன்னம்பலம், மாவட்ட விளையாட்டு ஆணையம் சாா்பில் நொய்லின் ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சரஸ்வதி, முன்னாள் ராணுவ வீரா் அருள்நம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →