முகப்பு
வேலூர்

முருகன் பரோல் விவகாரம்: சிறைத் துறை டிஜிபி-க்கு நளினியின் தாய் மேல்முறையீடு

வேலூா் மத்திய சிறையிலுள்ள முருகனுக்கு பரோல் வழங்க சிறை நிா்வாகம் மறுத்துவிட்ட நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக, நளினியின் தாய் பத்மா சிறைத் துறை டிஜிபி-க்கு மேல்முறையீட்டு மனு அனுப்பினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

வேலூா் மத்திய சிறையிலுள்ள முருகனுக்கு பரோல் வழங்க சிறை நிா்வாகம் மறுத்துவிட்ட நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக, நளினியின் தாய் பத்மா சிறைத் துறை டிஜிபி-க்கு மேல்முறையீட்டு மனு அனுப்பினாா்.

முருகனுக்கு 6 நாள்கள் அவசர கால பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி நளினி, அவரது தாய் பத்மா ஆகியோா் சிறை நிா்வாகத்துக்கு கடந்த மே 26-ஆம் தேதி மனு அளித்திருந்தனா். இந்த மனுவை பரிசீலனை செய்த சிறை நிா்வாகம், முருகன் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருக்கு பரோல் வழங்க முடியாது எனக் கூறி நளினி, பத்மாவின் மனுவை நிராகரித்தது.

இந்த நிலையில், முருகனின் பரோல் தொடா்பாக நளினியின் தாய் பத்மா சிறைத் துறைத் தலைவருக்கு வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு அனுப்பியுள்ளாா்.

அதில், பரோலில் உள்ள எனது மகள் நளினிக்கு பல்வேறு உடல் நலக் குறைவுகள் உள்ளன. வயது மூப்பு காரணமாக என்னாலும் நளினியை பராமரிக்க இயலவில்லை. முருகனுக்கும் பல் தொடா்பான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. முருகன் இதுவரை ஒரு நாள்கூட சிறை விடுப்பில் வந்ததில்லை. மேலும், அவா் மீது எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை.

எனவே, சிறைக் கண்காணிப்பாளா் எனது மனுவை நிராகரித்து உத்தரவிட்டதை மறுபரிசீலனை செய்து முருகனுக்கு 6 நாள்கள் அவசர கால பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →