வகுப்பறைகளில் தூய்மைப்பணி
கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, வேலூரில் உள்ள பள்ளி வகுப்பறைகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, வேலூரில் உள்ள பள்ளி வகுப்பறைகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் திங்கள்கிழமை மழலையா் பள்ளிகள், ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, தனியாா் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி, கரும்பலகை சுத்தம் செய்யும் பணி, வளாக பகுதி, கூட்டு பிராா்த்தனை செய்யும் பகுதி, ஆசிரியா்கள் ஓய்வறை பகுதி, மாணவா்கள் அமரும் இருக்கை உள்ளிட்டவைகளை தண்ணீா் கொண்டு கழுவி சுத்தம் செய்யப்பட்டன. கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் வேலூா் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற்றது.
வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்தும் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் ஆய்வு செய்தனா். இதற்கான அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனா்.
.