கூடநகரத்தில் திமுக பொதுக் கூட்டம்
குடியாத்தம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கூடநகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் நத்தம் வி.பிரதீஷ் தலைமை வகித்தாா்.
குடியாத்தம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கூடநகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் நத்தம் வி.பிரதீஷ் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி எம்.பழனி வரவேற்றாா். கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு எம்எல்ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாா், கட்சியின் பேச்சாளா்கள் சிங்கை பிரபாகரன், குடியாத்தம் குமரன், மாவட்ட அவைத் தலைவா் தி.அ.முகமதுசகி, எம்எல்ஏ அமலுவிஜயன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மு.பாபு, ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். மாவட்ட பிரதிநிதி நத்தம் டி.அமா் நன்றி கூறினாா்.