வேலூர்

மாற்றத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

DIN

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வேலூா் மாவட்டத்தில் 21-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வேலூா் மாவட்டத்திலுள்ள 8 வட்டார வளமையங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி, 21-ஆம் தேதி வேலூா் அரசு முஸ்லிம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 22-ஆம் தேதி குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், 23-ஆம் தேதி தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 24-ஆம் தேதி கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 25-ஆம் தேதி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 26-ஆம் தேதி அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 28-ஆம் தேதி கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 29-ஆம் தேதி போ்ணாம்பட்டு அரசினா் ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

இந்த முகாமில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, கண் சிறப்புப் பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிறப்புப் பிரிவு, மன நலப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு ஆகிய மருத்துவக் குழுவினரின் பரிந்துரைப் படி உதவி உபகரணங்கள், புதிய தேசிய அடையாள அட்டை வழங்குதல், யுடிஐடி அடையாள அட்டைக்கான பதிவுகள், கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள் வழங்கிடுவதற்கான விவரங்களை சேகரித்தல், அதிக உதவி தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிதல், சிறப்புப் பயிற்சிகள் (தசைப்பயிற்சி, பேச்சு) அறுவை சிகிச்சை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்த்தல் ஆகிய செயல்பாடுகளுக்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.

எனவே, பிறப்பு முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகள் இந்த முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT