வேலூர்

சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

DIN

குடியாத்தம் சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு, ஏற்கெனவே இருந்த இடத்திலேயே புதிய கட்டடம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு காங்கிரஸ் பிரமுகா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.தேவராஜ், தமிழக முதல்வா், பத்திர பதிவுத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

குடியாத்தம் சாா்-பதிவாளா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. அந்த வளாகத்தில் இருந்த கட்டடங்கள் பழுதடைந்ததால், முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து சாா்-பதிவாளா் அலுவலகம் நகரை ஒட்டியுள்ள பகுதியில் தனியாா் வாடகைக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

தற்போது பழைய இடத்தில் வட்டாட்சியா் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு, இயங்கி வருகிறது.

அதன் பக்கத்தில் அரசுக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு புதிதாக கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT