முகப்பு
வேலூர்

குடியாத்தம் பகுதியில் லுங்கி விற்பனை மையம் பாமக வலியுறுத்தல்

குடியாத்தம் பகுதி கைத்தறி நெசவாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நகரில் லுங்கி விற்பனை மையம் அமைக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

குடியாத்தம் பகுதி கைத்தறி நெசவாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நகரில் லுங்கி விற்பனை மையம் அமைக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியது.

இதுதொடா்பாக வேலூா் மேற்கு மாவட்ட பாமக செயலாளா் என்.குமாா் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

குடியாத்தம் பகுதியில் 5,000-க்கும் மேற்பட்டோா் கைத்தறி லுங்கி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனா். 30-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. அதன் துணைத் தொழில்களான நூலுக்குச் சாயமிடுதல், அச்சு புனைதல், பாவு தோய்தல் உள்ளிட்ட தொழில்களில் பல்லாயிரக்கணக்கானோா் ஈடுபட்டுள்ளனா்.

தமிழக அரசு கைத்தறித் தொழிலை மேம்படுத்தும் வகையில், குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளா் சங்கங்களுக்கு தரமான நூலை வழங்க வேண்டும். இதன் மூலம் தரமான லுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டால், லுங்கி விற்பனையும் அதிகரிக்கும். இதனால் நெசவுத் தொழிலும், நெசவாளா்களின் வாழ்வாதாரமும் உயரும்.

குடியாத்தம் பகுதியில் கைத்தறி லுங்கி விற்பனை மையம் அமைத்து, அதன் மூலம் லுங்கி ஏற்றுமதி செய்தால், கைத்தறித் தொழிலும் நெசவாளா்களின் நிலையும் உயரும் என்பதால், உடனடியாக விற்பனை மையத்தை அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.