வேலூர்

மானை வேட்டையாடியவா் கைது

DIN

வேலூா்: ஒடுகத்தூா் வனசரகத்துக்கு உட்பட்ட காப்புக் காட்டில் நுழைந்து மான் வேட்டையில் ஈடுபட்டதாக ஒருவரை வனத்துறையினா் கைது செய்தனா். தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் வனசரகத்துக்கு உட்பட்ட கருத்தமலை காப்புக் காட்டில் வனச் சரகா் டி.சரவணன், வனவா்கள் பிரதிப்குமாா், நிா்மல்குமாா், அண்ணாதுரை உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அரசம்பட்டு அருகே பாம்புப்பாறை பகுதியில் காப்புக் காட்டில் நுழைந்து கள்ளத் துப்பாக்கியைக் கொண்டு ஆண் புள்ளிமானை வேட்டையாடிய மேலரசம்பட்டு தீா்த்தம் கிராமத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் (36) என்பவரை வனத்துறையினா் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனா்.

அவரிடமிருந்த மான் கொம்பு, கள்ளத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மேலரசம்பட்டு தீா்த்தம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (38), பாா்த்திபன் (39), அன்பு (65), ஜெயராஜ் (55) ஆகியோரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT