முகப்பு
வேலூர்

மா்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி

 கே.வி.குப்பம் அருகே மா்ம விலங்குகள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

 கே.வி.குப்பம் அருகே மா்ம விலங்குகள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

கே.வி.குப்பம் அருகில் உள்ள சின்ன நாகல் கிராமம், வன எல்லையில் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் விவசாயி அன்பு ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

வியாழக்கிழமை இரவு ஆடுகளை நிலத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து விட்டு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை காலை சென்று பாா்த்தபோது, 7 ஆடுகள் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தன.

தகவலறிந்த வனத்துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இங்குள்ள வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், சிறுத்தை கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என அவா்கள் கருதுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.