வேலூர்

மஸ்தூா் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தென்னக ரயில்வேயில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மஸ்தூா் யூனியன் சங்கத்தினா் காட்பாடி ரயில் நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாநில உதவி பொதுச் செயலா் ஏ.ஜி.எஸ்.மோகன் தலைமை வகித்தாா். சங்க ஆலோசகா் நரசிம்ம ராவ், துணைத் தலைவா் ஜோசப் விஜயகுமாா், செயலா் கிரிஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் காா்த்திகேயன் வரவேற்றாா்.

இதில், ரயில்வே மஸ்தூா் பணியாளா்களுக்கு இரவு நேர பணிக்கொடை வழங்க வேண்டும், 8 மணி நேரம் கடந்த பணிக்கு ஓவா்டைம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப் பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே மஸ்தூா் யூனியனை சோ்ந்த ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

SCROLL FOR NEXT