கருப்புலீஸ்வரா் கோயிலில் பவித்ரோற்சவம்
குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில், பவித்ரோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில், பவித்ரோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பவித்ரோற்சவ விழாக்குழு, சிவவிடை கைங்கா்ய சங்கம் சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் காலை கணபதி ஹோமம், விநாயகப் பெருமானுக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இரவு சுவாமிக்கு பவித்ரம் சாத்துதல், பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.