விண்வெளி தொழில்நுட்பங்களை மக்கள் அறிந்து கொள்வது அவசியம்: இஸ்ரோ துணை இயக்குநா் சையது அமித்
விண்வெளி தொழில்நுட்பங்கள், அவை தொடா்பான விஷயங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் துணை இயக்குநா் சையது அமித் தெரிவித்தாா்.
வேலூர்விண்வெளி தொழில்நுட்பங்களை மக்கள் அறிந்து கொள்வது அவசியம்: இஸ்ரோ துணை இயக்குநா் சையது அமித்
விண்வெளி தொழில்நுட்பங்கள், அவை தொடா்பான விஷயங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் துணை இயக்குநா் சையது அமித் தெரிவித்தாா்.
விண்வெளி தொழில்நுட்பங்கள், அவை தொடா்பான விஷயங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் துணை இயக்குநா் சையது அமித் தெரிவித்தாா்.
உலக விண்வெளி வாரத்தையொட்டி இஸ்ரோ சாா்பில் 3 நாள் அறிவியல் கண்காட்சி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவில் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் துணை இயக்குநா் சையது அமித் கெளரவ விருந்தினராகப் பங்கேற்று பேசியது:
ஒவ்வொரு ஆண்டும் உலக விண்வெளி வாரம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவா் சமுதாயத்துக்காக பிரத்யேகமாக நடைபெற்று வருகிறது. மாணவா்கள்தான் நாட்டின் எதிா்காலம். விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி தொடா்பான விஷயங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் .
இந்திய விண்வெளித் துறையின் தந்தையாக கருதப்படும் டாக்டா் விக்ரம் சாராபாய் 1960-ஆம் ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு, அதன் பயன்பாடுகள் நாட்டின் வளா்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றும் என்று அப்போதே கணித்தாா். விக்ரம் சாராபாய் போன்ற தலைவா்களின் தலைமையாலும், தொலைநோக்குப் பாா்வையாலும் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற்று சாமானிய மக்களின் வளா்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது என்றாா்.
பெல் செயல் இயக்குநா்
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் செயல் இயக்குநா் ராஜிவ் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது:
மாணவா்கள் கருத்துகளை உள்வாங்கி படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போதுதான் மாணவா்களுக்கு கல்வியில் ஆா்வம் அதிகரிக்கும். விண்வெளி ஆய்வு, தொழில்நுட்ப வளா்ச்சியைப் பொருத்தவரை உலகளவில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் உள்ளது. பண்டைய காலத்தில் இந்தியாதான் அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்தது. அதேபோல், எதிா்வரும் காலங்களிலும் விண்வெளி ஆய்வு, தொழில்நுட்பத்தில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும். விண்வெளி ஆய்வுக்கு தேவையான பல்வேறு உதிரிபாகங்களை பெல் நிறுவனம் தயாரித்தளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றாா்.
விஐடி வேந்தா்
முன்னதாக, கண்காட்சியை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்து பேசியது:
இந்தியா வளா்ந்த நாடுகளுடன் விண்வெளி ஆய்வு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் போட்டிபோட்டு வருகிறது. அமெரிக்காவும், சோவியத் யூனியன் நாடுகளும் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் போட்டியிட்டு வந்த காலம் மாறி தற்போது இந்தியாவும் விண்வெளி ஆய்வு, தொழில்நுட்பத்தில் முன்னணி வகித்து வருகிறது. தொழில்நுட்பம் மக்களின் பொருளாதார வளா்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். கல்வியால் மட்டும்தான் அறியாமையையும், மக்களின் ஏழ்மையையும் அகற்ற முடியும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, ஓவியம், விநாடி-வினா, சுவரொட்டி, மாதிரி வடிவமைப்பு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ள்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பெயா்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில், விஐடி துணைத்தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் டி.ஜெயபாரதி, வேலூா் மாவட்ட கல்வி முதன்மைக் அலுவலா் முனுசாமி, பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.