முகப்பு
ப.சிதம்பரம்
தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அதிமுக காணாமல் போய்விடும்: ப.சிதம்பரம்

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் அதிமுக என்ற ஒரு கட்சியே தமிழ்நாட்டில் காணாமல் போய்விடும் என ப.சிதம்பரம் விமர்சனம் குறித்து....

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அதிமுக காணாமல் போய்விடும்: ப.சிதம்பரம்

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் அதிமுக என்ற ஒரு கட்சியே தமிழ்நாட்டில் காணாமல் போய்விடும் என ப.சிதம்பரம் விமர்சனம் குறித்து....

Updated On : 5 மார்ச், 2026 at 9:46 AM
ப.சிதம்பரம்
பகிர்:

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் அதிமுக என்ற ஒரு கட்சியே தமிழ்நாட்டில் காணாமல் போய்விடும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

குழப்பமான ஒரு மொழி நடை

சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்று பங்கேற்று பேசிய ப.சிதம்பரம், தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு இணையாக, பிரதமர் மோடி அரசு இந்தியைத் திணிக்கும் வகையில் புதிய முறையைக் கையாண்டுள்ளது. அதாவது, இந்திப் பெயர்களை அப்படியே ஆங்கில எழுத்துகளில் எழுதத் தொடங்கியுள்ளது.

மொழியைப் பொறுத்தவரை, இந்தி தெரிந்தவர்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியாது; அதேபோல், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு இந்திச் சொற்களின் பொருள் புரியாது. இத்தகைய குழப்பமான ஒரு மொழி நடையைத்தான் நரேந்திர மோடி அரசு தற்போது உருவாக்கியுள்ளது.

தமிழ் மொழி அழிந்துவிடும்

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டால், தமிழ் மொழி அழிந்துவிடும் என்பதற்கு இதுவே ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும். ஒரு மொழி வாழ வேண்டும் என்றால் அது பேச்சு மொழி, எழுத்து மொழி மற்றும் ஆட்சி மொழியாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

இந்துத்துவ நாடு

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் என்பது ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே தேர்தல் என்ற நோக்கில் மக்களை வஞ்சிப்பதாகவே அமைந்துள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள், இந்தியாவை ஒரு இந்துத்துவ நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகின்றன.

பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்

இதற்காக அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றை நாம் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கையாள வேண்டும். இதன் காரணமாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்.

அதிமுக காணாமல் போய்விடும்

பாஜக தொட்டதெல்லாம் பஸ்பமாகிவிடும். தற்போது அதிமுகவை அவர்கள் தொட்டுள்ளார்கள். அடுத்து வரும் 5 ஆண்டுகளில் அதிமுக என்ற ஒரு கட்சியே தமிழ்நாட்டில் காணாமல் போய்விடும்.

சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்

ஒவ்வொரு முறையும் பாஜக தமிழகத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

அமித்ஷாவின் பிடியில் சிக்கியுள்ள அதிமுக

வரவிருக்கும் தேர்தலில் திமுக தலைமையிலான மாபெரும் கூட்டணி நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அதிமுக கட்சியானது அமித்ஷாவின் பிடியில் சிக்கியுள்ளது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், அதிமுக தனது தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டது.

சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்க்கவும்

ஆனால், தமிழ்நாட்டு மக்களைக் காக்கும் நோக்கில் திமுக கூட்டணியினர் வீடு வீடாகச் சென்று தங்கள் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.

மொழியைக் காப்பாற்றுவது நமது கடமை

இன்னும் சில நாள்களில் தேர்தல் முடிந்து, மீண்டும் திமுக தலைமையில் தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலினை அமர வைத்து, தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது என சிதம்பரம் கூறினார்.

summary

ADMK will disappear in Tamil Nadu... P. Chidambaram's criticism

முழு கட்டுரையைப் படிக்க →