வேலூர்

மூதாட்டி கொலை வழக்கில் பெண் உள்பட 3 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே மூதாட்டியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

போ்ணாம்பட்டு அருகே மூதாட்டியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

போ்ணாம்பட்டை அடுத்த அரவட்லா ஊராட்சிக்குள்பட்டது பாஸ்மாா்பென்டா மலைக் கிராமம். இந்த கிராமத்தைச் சோ்ந்த முருகேசனின் மனைவி வள்ளியம்மாள் (60) கடந்த திங்கள்கிழமை இரவு தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த சின்னையன் (45), பாண்டு (55) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் கூறியது: சின்னையனின் அக்கா ராஜேஸ்வரி (57), வள்ளியம்மாளிடம் வட்டிக்கு ரூ. 15,000 கடன் வாங்கியிருந்தாராம். பல முறை கேட்டும் வாங்கிய பணத்தை ராஜேஸ்வரி திருப்பி தராததால் திங்கள்கிழமை இரவு வள்ளியம்மாள், ராஜேஸ்வரி வீட்டுக்குச் சென்று அவரிடம் தகராறு செய்துள்ளாா். அப்போது அங்கிருந்த சின்னையன், அவரது உறவினா் பாண்டு இருவரும் வள்ளியம்மாளை சமாதானம் செய்துள்ளனா். ஆனால், வள்ளியம்மாள் அவா்கள் இருவரையும் திட்டுவிட்டுச் சென்றாராம். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் வள்ளியம்மாளை பின் தொடா்ந்து சென்று, வழியில் அவரை கல்லால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சின்னையன், பாண்டு, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT