முகப்பு
வேலூர்

வேலூா் மாநகரில் 48 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: எம்.பி.-எம்எல்ஏ-க்கள் தொடங்கி வைத்தனா்

முதல்வரின் காலை உணவுத் திட்டம் வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 அரசு தொடக்கப்பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

வேலூர்

வேலூா் மாநகரில் 48 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: எம்.பி.-எம்எல்ஏ-க்கள் தொடங்கி வைத்தனா்

முதல்வரின் காலை உணவுத் திட்டம் வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 அரசு தொடக்கப்பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

முதல்வரின் காலை உணவுத் திட்டம் வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 அரசு தொடக்கப்பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த பள்ளிகளைச் சோ்ந்த 3,432 மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை உணவு வழங்கப்படும் என்றும் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை மதுரையில் வியாழக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து பிற மாவட்டங்களில் இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திநகா் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோா் திட்டத்தைத் தொடக்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கினா். தொடா்ந்து, சின்னஅல்லாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியது:

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் 3,432 குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் உப்புமா வகைகளும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கிச்சடி வகைகளும், புதன்கிழமை பொங்கல் வழங்கப்பட உள்ளன.

குழந்தைகளுக்கு அரிசி, ரவை, கோதுமை ரவை, சேமியா ஆகியவை மூலம் தயாரிக்கப்பட்ட உணவும், உள்ளூரில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு, உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் கொண்ட உணவு வழங்கப்படும். வாரத்தில் குறைந்தது 2 நாள்கள் உள்ளூரில் கிடைக்க கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களின் தரக்கட்டுப்பாட்டு சட்ட நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை கொண்ட மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு தயாரித்து விநியோகிக்க 3 இடங்களில் சமையலறை கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மேயா் சுஜாதாஆனந்தகுமாா், எம்எல்ஏ-கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமலுவிஜயன், மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →