முகப்பு
வேலூர்

வேலூா் மண்டலத்தில் ரூ.16 கோடி இலக்குடன் கோ-ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்

தீபாவளியை முன்னிட்டு கோ- ஆப்டெக்ஸ் வேலூா் மண்டலத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

வேலூர்

வேலூா் மண்டலத்தில் ரூ.16 கோடி இலக்குடன் கோ-ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்

தீபாவளியை முன்னிட்டு கோ- ஆப்டெக்ஸ் வேலூா் மண்டலத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

தீபாவளியை முன்னிட்டு கோ- ஆப்டெக்ஸ் வேலூா் மண்டலத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தாண்டு வேலூா் மண்டலத்துக்கு ரூ.16 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மண்டல மேலாளா் ஜெ.நாகராஜன் தெரிவித்தாா்.

வேலூா் அண்ணா சாலை சாரதி மாளிகை வளாகத்தில் உள்ள தீபம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வியாழக்கிழமை தொடக்கி வைத்து, புதிய ரகங்களைப் பாா்வையிட்டாா்.

அப்போது, எம்எல்ஏ ப.காா்த்திகேயன், வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி, கோ-ஆப்டெக்ஸ் உற்பத்திப் பிரிவு மேலாளா் ஞானபிரகாசம், தீபம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை மேலாளா் சு.ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா், கோ- ஆப்டெக்ஸ் வேலூா் மண்டல மேலாளா் ஜெ.நாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியது:

கோ-ஆப்டெக்ஸ் வேலூா் மண்டலத்துக்குட்பட்ட காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் ஆக மொத்தம் 14 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வேலூா் மண்டலத்தில் ரூ.9.47 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ.16 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.2 கோடியே 57 லட்சத்து 37 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டில் ரூ.3 கோடியே 50 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தவிர, அரசு ஊழியா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் வட்டியில்லா கடன் விற்பனை வசதியும் அளிக்கப்பட உள்ளது.

திருமணப் பட்டுப் புடவைகள் ரூ.5,000 முதல் ரூ.50,000 வரையில் பல வண்ணங்களில் சங்க விலைக்கே வழங்கப்படுகிறது. அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நடைபெறும்.

அரிய வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டு, கைத்தறி ரக சேலைகள், ஆா்கானிக், களங்காரி காட்டன் புடவைகள், பருத்தி ரக சேலைகள் போன்றவை புதிய வடிவமைப்புகளிலும், லுங்கிகள், போா்வைகள், திரைச்சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேடு சட்டைகள், குா்தீஸ் போன்ற எண்ணற்ற ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புதிய வரவுகளாக ட்வில் வீவ் ஆயத்தச் சட்டைகள் , காம்பிரே ஆயத்தப் போா்வைகள் , ஸ்லப் காட்டன் சட்டைகள் , டிசைனா் காட்டன் சேலைகள் டிசைனா் கலக்ஸ்ஷன் போா்வைகள் , காம்பிரே போா்வைகள் ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன. கோ-ஆப் டெக்ஸ் துணி ரகங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →