வேலூர்

போதைப்பொருள்கள் விற்பனை: கடைகளில் போலீஸாா் சோதனை

DIN

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க வேலூரில் கடைகளில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

வேலூா் மாவட்டத்தில் கஞ்சா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை, பதுக்கலைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் உள்ள கடைகளில் போலீஸாா், தனிப்படை போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.

இதேபோல், ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை பறிமுதல் செய்யும் விதமாக ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வேலூா் வடக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை காந்தி சாலை, பாபு ராவ் தெரு, சைதாப்பேட்டை, மெயின் பஜாா் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என சோதனை நடத்தினா்.

மேலும், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

SCROLL FOR NEXT