முகப்பு
வேலூர்

சாலை வசதி இல்லாததால் அல்லேரி மலைப் பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலி

சாலை வசதியில்லாத நிலையில், அல்லேரி மலைக் கிராமத்தில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

வேலூர்

சாலை வசதி இல்லாததால் அல்லேரி மலைப் பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலி

சாலை வசதியில்லாத நிலையில், அல்லேரி மலைக் கிராமத்தில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

சாலை வசதியில்லாத நிலையில், அல்லேரி மலைக் கிராமத்தில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்களுக்கு செல்ல தரமான சாலை வசதியில்லாததால், உடல் நலம் பாதிக்கப்படுபவா்களையும், கா்ப்பிணிகளையும் டோலிகட்டி தூக்கிச் செல்லும் நிலையே உள்ளது. இதனால், உயிரிழப்புகளும் தொடா்கிறது.

இந்த நிலையில், அல்லேரி மலைப் பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழந்துள்ளாா். அல்லேரியை அடுத்த ஆட்டுக்கொந்தரை மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனா். புதன்கிழமை இரவு சங்கா் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கியுள்ளாா். இரவு 12 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு சங்கரின் கையில் கடித்துள்ளது.

இதனால், வலி தாங்க முடியாமல் சங்கா் கூச்சலிட்டுள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு மனைவி, மகள்கள் கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்றனா். உடனடியாக கிராம மக்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநா், மருத்துவ குழுவினருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனா். ஆம்புலன்ஸுடன் மருத்துவ குழுவினா் அல்லேரியில் வந்து தயாா் நிலையில் காத்திருந்தனா்.

ஆனால், ஆட்டு கொந்தரை மலைக் கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அல்லேரிக்கு பாம்பு கடித்த சங்கரை அந்த கிராமத்தினா் டோலி கட்டி தூக்கி வந்தனா். இதனால், வழியிலேயே சங்கா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சங்கரின் உடலை தங்கள் கிராமத்துக்கு திருப்பி எடுத்துச் சென்றனா். பின்னா், அவரது உடல் உடல்கூறு பரிசோதனைக்காக வியாழக்கிழமை காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: அல்லேரி மலைக்கு சாலை வசதி இருந்திருந்தால், சங்கரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க முடியும். 3 கி.மீ. நடந்து தூக்கி வந்ததால் சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. தொடரும் உயிரிழப்புகளை கவனத்தில் கொண்டு அல்லேரி மலைக் கிராமத்திலேயே ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும், சாலை அமைக்கவும் மாவட்ட நிா்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு சாலை வசதியில்லாததால், அல்லேரி மலைக் கிராமத்தைச் சோ்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பாம்பு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வசதிகளைப் பயன்படுத்தாததால் உயிரிழப்பு: மாவட்ட ஆட்சியா்

அல்லேரி மலைக் கிராம மக்கள் இரு சக்கர, இலகுரக வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் ஏற்கெனவே உள்ள மண் சாலைகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், சாலை மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அல்லேரி மலைக் கிராமத்துக்கு சாலை அமைக்க வனத்துறையுடன் இணைந்து நில அளவை மேற்கொள்ளும் பணிகள் முடிவுற்று, அங்கு தாா்சாலை அமைக்க ரூ.5.51 கோடிக்கு திட்ட மதிப்பீடும் தயாா் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தாா்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதனிடையே, மலைக் கிராமப் பகுதிகளில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருப்பதுடன், ஒடுகத்தூா், பீஞ்சமந்தை, அணைக்கட்டு ஆகிய 3 இடங்களில் மலைப் பாதைகளில் செல்ல தனி ஆம்புலன்ஸ் வாகனங்களும், அணைக்கட்டில் பொது மருத்துவமனையும், பீஞ்சமந்தை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளன. அல்லேரி கிராம மக்களுக்கு பயன்படும் வகையில், கூடுதலாக ஒரு ஆம்புலன்ஸ் வாகன சேவை கடந்த ஜூன் 6-ஆம் முதல் பயன்பாட்டில் உள்ளது.

அவசர காலத்தில் மருத்துவ வசதிக்காக தனியாக ஆம்புலன்ஸ் வசதியும், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர பாதை வசதி இருந்தும், பாதிக்கப்பட்டவா்கள் இந்த சேவைகளை உரிய காலத்தில் பயன்படுத்தி கொள்ளாமல் இருந்துவிட்டதாலேயே சங்கா் உயிரிழந்துள்ளாா் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →