முகப்பு
வேலூர்

உழவா் சந்தை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைப்பு

போ்ணாம்பட்டில் உழவா் சந்தை அமைப்பதற்கான பணியை எம்எல்ஏ அமலுவிஜயன் வியாழக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

போ்ணாம்பட்டில் உழவா் சந்தை அமைப்பதற்கான பணியை எம்எல்ஏ அமலுவிஜயன் வியாழக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தாா்.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் போ்ணாம்பட்டில் உழவா் சந்தை தொடங்க திட்டமிடப்பட்டது. இதற்காக பங்களாமேடு அருகே இடம் தோ்வு செய்து, ரூ.75- லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து போ்ணாம்பட்டு ஆத்மா தலைவா் பொகளூா் ஜனாா்த்தனன் தலைமையில் எம்எல்ஏ அமலுவிஜயன் உழவா் சந்தை அமைப்பதற்கான பணியை பூஜையுடன் தொடங்கி வைத்தாா்.

இதில், நகா்மன்றத் தலைவா் பிரேமா வெற்றிவேல், துணைத் தலைவா் ஆலியாா்ஜுபோ் அகமத், வேளாண் விற்பனை உதவிப் பொறியாளா் வடிவேல், வேளாண் விற்பனைத் துறை அலுவலா் லீலாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்தால் 30- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.