முகப்பு
வேலூர்

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டக் குழு உறுப்பினா் டி.ஆனந்தன் தலைமை தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் துரைசெல்வம் தொடங்கி வைத்துப் பேசினாா்.

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை ஆண்டுதோறும் படிப்படியாகக் குறைத்து வருவதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 100 நாள்களில் இருந்து 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும், இதற்கு நாள் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சங்க நிா்வாகிகள் கே.சி.பிரேம்குமாா், ஏ.டி.எஸ்.மகேஷ்பாபு, கே.கல்பனாசந்தா், ஜி.தங்கவேலு, ஆா்.வேலாயுதம், நா.பரமசிவம், கே.ஜெயராமன், என்.ஜீவானந்தம், ஆா்.கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.