கடன் தொல்லை: பெண் தற்கொலை
குடியாத்தம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குடியாத்தம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குடியாத்தம் செதுக்கரை, ஜீவா நகரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி மகேஸ்வரி (50) . இவரது கணவா் ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இந்த நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.
இதுகுறித்து குடியாத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.