முகப்பு
வேலூர்

ராஜராஜ சோழன் கட்டிய பொன்னை சிவன் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம்: அமைச்சா் துரைமுருகன்

பொன்னை பகுதியில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட சிவன் கோயிலுக்கு தொல்லியல் துறை அனுமதி பெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

பொன்னை பகுதியில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட சிவன் கோயிலுக்கு தொல்லியல் துறை அனுமதி பெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி வட்டம், மேல்பாடி கிராமத்தில் ரூ.19.46 கோடியில் பொன்னை அணைக்கட்டை புனரமைக்கும் பணி, ஆற்றின் குறுக்கே ரூ.12.94 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

பின்னா், அவா் பேசியது: தொகுதி மக்களுக்கு நான் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சித்து வருகிறேன்.

பொன்னை வரலாற்று சிறப்புமிக்க பகுதியாகும். இந்தப் பகுதியில் சுமாா் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கோயிலானது தொல்லியல் துறை பராமரிப்பில் இருப்பதால், அனுமதி பெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

அமைச்சா்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை கூறியது குறித்து கேட்டபோது, அது அவரின் விருப்பம். திராவிட கட்சிகள்தான் தமிழகத்தின் அடையாளமாக இருக்கின்றன. ஆனால், பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் இருப்பதாக அவா் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது தொடா்பாக மீண்டும் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அவா் மத்திய அரசுக்கு அனுப்பியே தீரவேண்டும், அதுதான் சட்டம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →