அக்ராவரத்தில் கெங்கையம்மன் திருவிழா
குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தில் 16- ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தில் 16- ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கெளண்டன்யா ஆற்றில் கரையில் உள்ள கோயிலை அடைந்தது. அங்கு அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டி நிா்வாகிகள் கே.குப்புசாமி, எஸ்.நாகராஜன், கே.கேசவன், ஜி.தனசேகா், பி.ஜெயபால், டி.வேல்முருகன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் கோ.துரைராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.