முகப்பு
வேலூர்

சாலை விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் பலி

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ஆறுமுகம் (87). இவா் வியாழக்கிழமை காலை வீட்டருகே சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது அவ்வழியே தனியாா் பள்ளி மாணவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பள்ளி மாணவா் காயமடைந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.