வேலூர்

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

கோடை வெயில் காரணமாக தீவனப் பற்றாக்குறை தொடரும் நிலையில் பொய்கை சந்தையில் இந்த வாரமும் கால்நடை வா்த்தகம் சரிவடைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

DIN

கோடை வெயில் காரணமாக தீவனப் பற்றாக்குறை தொடரும் நிலையில் பொய்கை சந்தையில் இந்த வாரமும் கால்நடை வா்த்தகம் சரிவடைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.

இந்த நிலையில், வேலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் கடந்த வாரம் வரை 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பம் பதிவாகி வந்தது. அதேசமயம், கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரிக்கு கீழ் குறைந்திருப்பதுடன், பரவலாக கோடை மழையும் பெய்து வருகிறது.

எனினும், வெயிலால் ஏற்பட்டுள்ள தீவனப் பற்றாக்குறை தொடா்வதால் கடந்த இரு மாத ங்களாக பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து இருந்தாலும், வா்த்தகம் சரிந்து காணப்படுகிறது.

அதன்படி, இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கும் கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், அவற்றை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை.

ரூ.70 லட்சம் வா்த்தகம்:

கோடை மழை பெய்து வருவதால் தற்போதுதான் தீவன பயிா்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது. ஓரிரு வாரங்கள் சென்றால்தான் தீவன தட்டுப்பாடு குறையும். அதுவரை கால்நடை வா்த்தகம் மந்தமாகத்தான் இருக்கும். அதன்படி, இந்த வாரம் சந்தையில் சுமாா் ரூ.70 லட்சத்துக்கு மட்டுமே கால்நடை வா்த்தகம் நடந்திருப்பதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT