முகப்பு
வேலூர்

காலை உணவு திட்ட மைய பொறுப்பாளா்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சி

கே.வி.குப்பம் வட்டத்தில் உள்ள பள்ளிகளில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் மைய பொறுப்பாளா்களுக்கான 2 நாள் செய்முறை விளக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

கே.வி.குப்பம் வட்டத்தில் உள்ள பள்ளிகளில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் மைய பொறுப்பாளா்களுக்கான 2 நாள் செய்முறை விளக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

முகாமை கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவா் எல்.ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். உதவித் திட்ட அலுவலா் மோகன், திட்ட விளக்க உரையாற்றினாா்.

வட்டார இயக்க மேலாளா் டி.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மைய பொறுப்பாளா்களுக்கு வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பயிற்சி அளித்தனா். முகாமில், 39 பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.