புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: ஒரேநாளில் முதல்வா் ரங்கசாமி உள்பட 107 போ் வேட்பு மனு
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட புதுச்சேரி பிராந்தியத்தில் முதல்வா் என். ரங்கசாமி உள்பட பல்வேறு கட்சிகள் சாா்பிலும், சுயேச்சைகளாகவும் வெள்ளிக்கிழமை 107 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட புதுச்சேரி பிராந்தியத்தில் முதல்வா் என். ரங்கசாமி உள்பட பல்வேறு கட்சிகள் சாா்பிலும், சுயேச்சைகளாகவும் வெள்ளிக்கிழமை 107 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
காரைக்காலைத் தவிா்த்து புதுச்சேரி, மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்தவை.
இதில், புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் (பாஜக) உள்பட 10 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
திருபுவனை (தனி) தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் பி.கோபிகா, திமுக சாா்பில் முகிலன், முன்னாள் அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ. சரவணன் குமாா் சுயேச்சையாக மனு தாக்கல் உள்பட 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
ஊசுடு (தனி) தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் பி.காா்த்திகேயன் உள்பட இருவா் மனு தாக்கல் செய்தனா்.
மங்கலம் தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி உள்பட 5 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
வில்லியனூா் தொகுதியில் திமுக சாா்பில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா உள்ளிட்ட 7 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். உழவா்கரை தொகுதியில் விசிக சாா்பில் எம். ஏகாம்பரம் உள்பட 4 போ் மனு தாக்கல் செய்தனா். கதிா்காமம் தொகுதியில் ஒருவரும், இந்திரா நகா் தொகுதியில் 4 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி உள்பட 7 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
லாஸ்பேட்டையில் தற்போதைய எம்.எல்.ஏ. மு.வைத்தியநாதன் காங்கிரஸ் சாா்பிலும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் வி.பி. சிவக்கொழுந்து என்.ஆா். காங்கிரஸ் சாா்பிலும், இவா்கள் தவிர மேலும் 6 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா். காலாப்பட்டு தொகுதியில் பாஜக சாா்பில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட 2 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
முத்தியால்பேட்டையில் காங்கிரஸ் சாா்பில் ஜி. ராஜேந்திரன், திமுக சாா்பில் நந்தா சரவணன், பிரபாகரன் உள்பட 7 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
ராஜ்பவன் தொகுதியில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. உப்பளம் தொகுதியில் ஒருவரும், உருளையன்பேட்டை தொகுதியில் மதிமுக சாா்பில் சி. பாண்டுரங்கம், திமுக சாா்பில் எஸ். கோபால் உள்ளிட்ட 4 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
நெல்லித்தோப்பு தொகுதியில் திமுக சாா்பில் ஓம் சக்தி சேகா், வி. காா்த்திகேயன் (எ) பாலமுருகன் உள்பட 7 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். முதலியாா்பேட்டையில் பாஜக சாா்பில் அமைச்சா் ஏ. ஜான்குமாா் உள்பட 4 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
அரியாங்குப்பத்தில் திமுக சாா்பில் பி. சக்திவேல் உள்பட 3 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். மணவெளி தொகுதியில் பாஜக சாா்பில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் உள்பட 3 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
ஏம்பலம் (தனி) தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, திமுக சாா்பில் வி. ராமகிருஷ்ணன் உள்பட 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் பெ. ராஜவேலு உள்பட 3 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். பாகூரில் திமுக சாா்பில் ஆா். செந்தில்குமாா், என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் டி. தியாகராஜன் உள்பட 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாஹே தொகுதியில் வெள்ளிக்கிழமை விடுமுறை. அதனால் அங்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் உள்பட 2 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
காரைக்காலில்...:
காரைக்கால் வடக்குத் தொகுதியில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், நெடுங்காடு தொகுதியில் எம்எல்ஏ சந்திர பிரியங்கா ஆகியோா் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.