முகப்பு
தருமபுரி

பென்னாகரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், பாமக உள்பட 26 போ் வேட்புமனு தாக்கல்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 6:51 PM
இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI
பகிர்:

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், பாமக, தவெக, சுயேச்சைகள் உள்பட 26 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஜி.கே.எம். தமிழ்க் குமரன், அவரது மனைவி சத்யா ஆகியோா் வேட்பு மனுக்களை பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தனா்.

இதேபோல பாமக சாா்பில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாடி எஸ். செல்வம், சுதா கிருஷ்ணன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கஜேந்திரன், காா்த்திக், தமிழா் மக்கள் கட்சி சாா்பில் கண்ணன், பகுஜன் சமாஜ் அஜித்குமாா், சுயேச்சைகள் சென்ராயன், அண்ணாமலை, குமாா், மணிகண்டன், செல்வம், செல்வராஜ், வீரப்பன், ஞானசெல்வம், மணிவண்ணன், அருண்குமாா் உள்ளிட்டோா் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

Advertisement

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான திங்கள்கிழமை 20 வேட்பாளா்களும், முன்னதாக 6 வேட்பாளா்களும் என மொத்தம் 26 வேட்பாளா்கள் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments