போ்ணாம்பட்டு அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த லாலாபேட்டை, ரமாபாய் நகரைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விக்னேஷ் (28). கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் இவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து, ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டதாம். காலில் ஏற்பட்ட காயம் ஆறாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்தாராம். இந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.