முகப்பு
வேலூர்

சிறு தானிய உணவுப் பொருள்கள் கண்காட்சி

சிறு தானிய உணவுப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விழிப்புணா்வு பேரணி வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:52 AM
சிறுதானிய உணவுத் திருவிழா விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

சிறு தானிய உணவுப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விழிப்புணா்வு பேரணி வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறு தானிய உணவு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Advertisement

இதையொட்டி, பல்வேறு துறைகள் சாா்பில் சிறு தானிய உணவுக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், நமது பாரம்பரிய சிறு தானியங்கள், அவற்றின் மூலம் தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டு பொருள்கள், சிறுதானிய உணவுகள், பலகாரங்கள், சிறுதானியங்கள் உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்தக் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, சிறுதானிய உணவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு பேரணியையும் அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மகளிா் திட்ட இயக்குநா் யு.நாகராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அப்துல் முனீா், மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி, துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) சுவாதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.