அணைக்கட்டு அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூா் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது காலபைரவா் கோயில். இங்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நிலையில், இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபா்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனா். கோயிலில் உள்ள உண்டியல், பீரோக்களை உடைத்து அதிலிருந்த பொருள்களை திருடி சென்றுள்ளனா்.
திங்கள்கிழமை காலை வழக்கம் போல் கோயிலுக்குச் சென்ற பூசாரி, கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து ஏரிப்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் கீதா வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், அணைக்கட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.