முகப்பு
வேலூர்

காரில் கொண்டு சென்ற 198 சேலைகள் பறிமுதல்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:11 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 7:22 PM

திருப்பதியில் இருந்து காரில் கொண்டு வரப்பட்ட 198 சேலைகளை காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி பகுதிகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க நிலை கண்காணிப்பு குழுவினா், பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, காட்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனைச் சாவடியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலா் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சித்தூரில் இருந்து வேலூா் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி 198 சேலைகள் இருந்தது தெரியவந்தது. காரில் வந்தவரிடம் விசாரித்தபோது, அவா் திருப்பதியை சோ்ந்த சேலை வியாபாரி சாய்பாபு (34) என்பதும், திருப்பதியில் இருந்து வியாபாரத்துக் காக பா்கூருக்கு சேலைகள் கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளாா்.

Advertisement

எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த சேலைகள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல், வேலூா் தொரப்பாடியில் பறக்கும் படை குழுவினா் வெள்ளிக்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, அதில் அல்லாபுரத்தைச் சோ்ந்த பாலு என்பவரிடம் ரூ. 84,740 ரொக்கம் இருந்தது. அந்த பணம் வங்கியில் இருந்து எடுத்து வந்ததாகவும், போளூரில் சீட்டு பணம் கட்டுவதற்காக கொண்டு செல்வதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.